
நடிகை அனுஷ்கா மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் டோலிவுட்டில் உருவாகி வரும் சரித்திர திரைப்படமான ருத்ரமாதேவி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் புரமோஷன் நிகழ்ச்சியில் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கலந்து கொள்ள வேண்டும் என இயக்குநர் குணசேகர், மகேஷ் பாபுவிற்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.
மகேஷ் பாபுவின் திரை உலக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வெற்றிப் படமாக அமைந்த ஒக்கடு படத்தை இயக்குநர் குணசேகர் இயக்கியிருந்தார்.அது முதல் மகேஷ் பாபுவும் குணசேகரும் நல்ல நண்பர்களாக டோலிவுட்டில் அறியப்படுகின்றனர். இதனால் குணசேகரின் அழைப்பை மகேஷ் பாபு ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் அனுஷ்காவுடன் ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரினா திரேஷா போன்றோரும் நடித்துள்ளனர்.3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் இப்படம் தயாரிக்கப்படுள்ளது.
Post your comment