'மகாபலிபுரம்' மார்ச் வெளியீடு

Bookmark and Share

'மகாபலிபுரம்' மார்ச் வெளியீடு

பிப்ரவரி மாதத்தில் தொடர்ந்து பெரிய நிறுவனங்கள் வெளியிடும் படங்களாகவே வந்து கொண்டிருப்பதால் பல சிறிய படங்களின் வெளியீடு மார்ச் மாதத்திற்கும் ஏப்ரல், மே மாதங்களுக்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17 படங்கள் வெளிவந்தன.

ஆனால், இந்த மாதம் அந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது. மார்ச் மாதம் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி மும்முரமாக நடந்து கொண்டிருக்கும். கூடவே, பல பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுகளும் நடக்கும்.

அதனால் பொதுவாக மார்ச் மாதங்களில் படங்களை வெளியிடத் தயங்குவார்கள். ஆனால், ஏப்ரல், மே மாதங்களில் பல பெரிய படங்கள் வெளிவர இருப்பதால் மார்ச் 3வது, 4வது வாரங்களில் சில படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தற்போதெல்லாம் ஒரு படம் வெளியானால் வெளியாகும் வெள்ளி, மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகள் மட்டுமே அந்தப் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. சுற்றுலாத் தளமான மகாபலிபுரம் பகுதியில் இருக்கும் ஐந்து இளைஞர்களைப் பற்றிய கதையான மகாபலிபுரம் படத்தை மார்ச் மாதம் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

டான் சாண்டி இயக்கத்தில் கே இசையமைப்பில் கருணாகரன், ரமேஷ், வெற்றி, வினாயக், கார்த்திக் சபேஷ், வித்திகா, அங்கனா ராய் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions