மகாபலிபுரம் படத்திற்கு மகாபலிபுரம் மக்கள் எதிர்ப்பு

Bookmark and Share

மகாபலிபுரம் படத்திற்கு மகாபலிபுரம் மக்கள் எதிர்ப்பு

கடந்த 13ம் தேதி வெளியான படம் மகாபலிபுரம். டான் சாண்டி என்பவர் இயக்கி இருந்த இந்தப் படத்தை விநாயக் என்பவர் தயாரித்து, ஹீரோவாகவும் நடித்திருந்தார். அவருடன் கருணாகரன், வித்திகா, ரமேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். மகாபலிபுரத்தை சேர்ந்த இளைஞர்களின் கதையாக இதனை எடுத்திருந்தார்கள். முழு படமும் மகாபலிபுரத்திலேயே எடுக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்தப் படம் எங்கள் ஊரை அவதூறாக சித்தரிக்கிறது என்று மகாபலிபுரத்து மக்கள் நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டி உள்ளனர். "மகாபலிபுரத்திற்கு சிறப்பு சேர்க்கும் சிற்பகலை கூடத்தில் கஞ்சா விற்பது போன்றும், வெளிநாட்டினர் அதிகம் பயன்படுத்தும் ஒத்தவாடை தெருவில் பாலியல் தொழில் நடப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினருடன் மகாபலிபுரத்து பெண்கள் பாலியல் தொழில் செய்வது போலவும், மகாபலிபுரத்திற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரை இங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றுவது போலவும், கிண்டல் செய்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

இந்த படத்தை பார்த்தால் வெளிநாட்டினர் மகாபலிபுரம் வரமாட்டார்கள்" என்று மாகாபலிவுரம் பகுதி மக்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக மகாபலிபுரம் பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தை அமைப்பினர் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions