பிக்பாஸ் நிகழ்ச்சியால் மகத் காதல் முறிவு

Bookmark and Share

பிக்பாஸ் நிகழ்ச்சியால் மகத் காதல் முறிவு

பிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் அவருக்கு நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த பிறகும் மகத் மீது நம்பிக்கை வைத்திருந்த பிராச்சி இதை பார்த்து மனம் உடைந்தார்.

பிக் பாஸ் வீட்டிற்கு கிளம்பிய அன்று மகத் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிராச்சி. பிராச்சியை பிரிந்து 3 மாதம் எப்படித்தான் இருக்கப் போகிறேனோ என்று காதல் பொங்க பேசியுள்ளார் மகத். அந்த வீடியோவில் இருந்த மகத் தற்போது இல்லை, மாறிவிட்டார் என்கிறார் பிராச்சி.

நான் அவரை இன்னும் காதலிக்கிறேன். நான் இனியும் அவர் காதலி கிடையாது. ஆனால் அவரை நேரில் சந்தித்து அனைத்து வி‌ஷயங்கள் குறித்தும் பேசுவேன். அவர் யாஷிகாவை காதலிப்பது தற்போது தெரிந்துவிட்டது. நான் வேதனையில் உள்ளேன். இதனால் என் வாழ்க்கை மாறிவிடாது.

மகத் மும்தாஜிடம் கேவலமாக நடந்து கொண்டிருக்கிறார். அவரின் ஒரே ஒரு நலம் விரும்பியான ஜனனியையும் அவர் ஆதரிக்கவில்லை. அவரை பற்றி இனி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions