தெறியில் மிரட்டிய மகேந்திரன்… அதிர்ந்த போன விஜய்…!

Bookmark and Share

தெறியில் மிரட்டிய மகேந்திரன்… அதிர்ந்த போன விஜய்…!

ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்போடு ‘தெறி’ படத்தை எதிர்பார்த்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்களும், டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அதோடு படத்தை பற்றி நாளுக்கு நாள் ஒரு புதிய அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளதால் விஜய் ரசிகர்களுக்கு மேலும் மேலும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இதனால் படம் எப்போது ரிலீஸாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆரம்பத்தில் ‘தெறி’ படத்தில் மூன்று விஜய் என்று கூறிவந்த நிலையில் சமீபத்தில் ஒரே ஒரு விஜய்தான் வெவ்வேறு கெட்டப்புகளில் வருகிறார் என தகவல் வெளியானது. அதவாது போலீஸாக நடித்துள்ள விஜய், குற்றவாளிகளை தேடி மூன்று மாநிலங்களுக்கு செல்கிறாராம்.

அப்போது ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு பெயருடன் ஒவ்வொரு கெட்டப்பில் என்ட்ரி கொடுக்கிறாராம் விஜய். அதோடு, மூன்று கெட்டப்புகளிலும் வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்துள்ளதுடன், டப்பிங்கிலும் வித்தியாசப்படுத்தி பேசியிருக்கிறாராம் விஜய்.

மேலும், இந்த படத்தில் இயக்குநர் மகேந்திரன் தன்னை நடிப்பால் மிரட்டியதாக கூறியுள்ளார் விஜய். “நடிப்புக்கு மகேந்திரன் சார் புதுசாக இருந்தாலும் சினிமாவில் பெரிய அனுபவசாலி.

அந்த வகையில், எனது ஒவ்வொரு படங்களிலுமே பலதரப்பட்ட வில்லன்களை பார்த்திருக்கும் எனக்கு அவரது நடிப்பு மிக வித்தியாசமாகவும், புதுமையாகவும் உள்ளது. அந்த அளவுக்கு வில்லத்தனத்தை அவர் தனது கண்களில் பிரதிபலித்தார்” என்று கூறிவருகிறார் விஜய்.

“அப்போ அடுத்த படத்திலும் விஜய்க்கு வில்லனாக மகேந்திரன் நடித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை…!!”

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions