இளையதளபதியை மிரள வைத்த இயக்குனர்

Bookmark and Share

இளையதளபதியை மிரள வைத்த இயக்குனர்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தை தாணு தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், பிரபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தனக்கு ஒருவரின் நடிப்பு பிடித்தால் உடனே மனம் திறந்து பாராட்டக்கூடியவர் விஜய்.

இதில் பெரிய நடிகர் சிறிய நடிகர் என்ற வேறுபாடே பார்க்கமாட்டாராம். சமீபத்தில் இயக்குனர் மகேந்திரன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது அவரின் நடிப்பை பார்த்து அசந்து போய் விட்டாராம் விஜய்.

அவரின் நடிப்பு பற்றி விஜய் கூறியதாவது:

அவர் நல்ல இயக்குனர் என்று தெரியும். இவ்வளவு சிறந்த நடிகர் என்பது இப்ப தான் பார்க்குறேன். இந்த கதாபாத்திரதுக்கு இவர் எப்படி... சரியா வருமா.. என்று நினைத்தேன். இதை இவரைத் தவிர யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமா? என்ற அளவுக்கு நடித்துவிட்டார்.

அது மட்டும் இல்லாமல் கண்டிப்பாக அடுத்த வருடம் சிறந்த வில்லன் விருது உங்களுக்கு தான் சார் எனக் கூறினாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions