மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க 3 நாயகிகள் பரிசீலனை!

Bookmark and Share

மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க 3 நாயகிகள் பரிசீலனை!

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இந்தியில் ‘அகிரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக மகேஷ் பாபு தேர்வாகியுள்ளார். இந்நிலையில், கதாநாயகியாக இரண்டு மொழிகளிலும் நன்கு அறிமுகமான கதாநாயகியை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளனர். 

அதன்படி, கீர்த்தி சுரேஷ், பரினிதி சோப்ரா, சாய் பல்லவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தின் மூலம் அனைத்து மொழிகளிலும் நன்கு அறிமுகமானவர் சாய் பல்லவி.

அதேபோல், கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். பரினிதி சோப்ரா இந்தியில் மட்டுமே நன்கு பரிச்சயமானவர். 

இதனால், கீர்த்தி சுரேஷ் அல்லது சாய் பல்லவி ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions