தனி ஒருவன் மீது மகேஷ் பாபுவுக்கும் ஆசை வந்துவிட்டது ?

Bookmark and Share

தனி ஒருவன் மீது மகேஷ் பாபுவுக்கும் ஆசை வந்துவிட்டது ?

தமிழ்த் திரையுலகில் இதுவரை வெளிவந்துள்ள ஆக்ஷன் படங்களில் ஒரு புதிய பாதையை, திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள படமாக தனி ஒருவன் படம் அமைந்தது. வழக்கமான தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு நாயகன் வில்லனுடன் மோதும் வழக்கமான மசாலாத்தனமில்லாத இப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.

அதன் வெளிப்பாடுதான் இந்தப் படம் இரண்டாவது வாரத்தையும் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சரியான வெற்றிப் படம் அமையால் தடுமாறிக் கொண்டிருந்த ஜெயம் ரவிக்கும் தனி ஒருவன் படம் நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

மோகன் ராஜா எனப் பெயரை வைத்துக் கொண்ட ராசியோ, என்னமோ ஜெயம் ராஜா, தான் இயக்கிய முதல் நேரடித் தமிழ்ப் படத்தினை திரையுலகம் முழுவதும் பேச வைத்திருக்கிறார்.

காலையில்தான் இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க தெலுங்கு நடிகரான ராம்சரண் மிகவும் ஆர்வமாக இருக்கிறார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது மற்றுமொரு முன்னணி நடிகரான மகேஷ் பாபும் படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டியிருக்கிறாராம்.

இந்தப் படமும், கதாபாத்திரமும் தனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என அவர் நினைக்கிறாராம். அதனால், அவருடன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்குவதற்கான போட்டியில் களமிறங்கியிருக்கிறார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரீமேக் உரிமையைப் பெறுவதில் தற்போது ராம்சரணுக்கும், மகேஷ்பாபுவுக்கும் போட்டி ஆரம்பமாகியுள்ளதாம். 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions