மகேஷ் பாபு நிஜத்திலும் ஹீரோ தான்

Bookmark and Share

மகேஷ் பாபு நிஜத்திலும் ஹீரோ தான்

சினிமாவில் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள், செய்வார்கள் ஆனால் சொல்வதை, செய்வதை நிஜ வாழ்க்கையில் கடைபிடிக்கும் நாயகர்களைப் பார்ப்பது அரிது.

நிழலை நிஜமென நினைத்து அணுகினால்தான் பலரின் சுயரூபம் தெரிய வரும். ஆனால், தான் அப்படிப்பட்ட நிழல் ஹீரோ மட்டுமல்ல, நிஜமான ஹீரோவும் கூடத்தான் என தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நிரூபித்து வருகின்றார்.

சமீபத்தில்  வெளிவந்த அவருடைய ஸ்ரீமந்துடுபடத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதை முற்றிலும் அவர் மாற்ற முயல்வதாக படத்தின் கதை இருந்தது. அதை தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் செய்ய ஆரம்பித்திருக்கிறார் மகேஷ்பாபு.  அவருடைய சொந்த கிராமமான புர்ரிபளம் கிராமத்தை தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதை ஸ்மார்ட் வில்லேஜாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.புர்ரிபளம் கிராமம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. இப்போதுதான் தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களாக ஆந்திராவும், தெலுங்கானாவும் மாறிவிட்டதே. அதனால் தெலுங்கானா அமைச்சர் ஒருவர் மகேஷ் பாபுவிடம் மிகவும் பின் தங்கிய மாவட்டமான மகபூப் நகரில் உள்ள ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க மகேஷ் பாபும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய அறிவிப்பை மகேஷ் பாபு நேற்று இரவே அவருடைய டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ்த் திரையுலகிலும் பல ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களாக முயற்சித்து வருகிறார்கள். அவர்களும் மகேஷ்பாபுவைப் போல உண்மையிலேயே சில கிராமங்களைத் தத்தெடுத்துக் கொண்டால் கிராமங்களும் புத்துயிர் பெறுவதோடு நடிகர்களைத் தொடர்ந்து அவர்களுடைய ரசிகர்களும் தங்களால் ஆன உதவிகளை செய்ய முன்வருவார்கள்.

 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions