இணையத்தில் வெளிவந்த பிரமோற்சவம் கதை

Bookmark and Share

இணையத்தில் வெளிவந்த பிரமோற்சவம் கதை

ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மகேஷ்பாபு தனது அடுத்தபடமான பிரமோற்சவம் படத்தில் நடிக்க இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்க, பிவிபி நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் பாபு தயாரிக்கின்றார்.  இதில் சமந்தா, பிரனிதா, காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.
இப்படத்தில் மகேஷ் பாபு தனது ஆறு அத்தை என உறவினர்களுடன் கிராமத்தில் வசித்து வரும்போது  ஒரு பிரச்சனையால்  வந்து உறவுகளை பிரித்து விடுவராம். பின்னர் மகேஷ் பாபு தனது உறவுகளை சேர்த்து வைக்க போராடுவதே கதையாகும்.
தற்போது இப்படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.  இப்படம் தமிழில் சுந்தர் சி இயக்கிய விஷால் நடித்த ஆம்பள படக்கதை ஞாபகத்திற்கு வருகிறது.
மம்முட்டியின் படத்தலைப்பு மாறியது புதிய நியமம் நடிகர் மம்முட்டி எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் தனது பட டைட்டில்களை வைக்க வேண்டும் என்று நினைப்பவர்.
சில டைட்டில்கள் மலையாள மண்வாசத்துடன் கதைக்கேற்றவாறு அமைந்துவிடுவதால் இயக்குனர்களின் விருப்பத்துக்கு இணங்க ஒப்புக்கொண்டு விடுகிறார்.
கடந்தாண்டில் அவர் நடித்த  ராஜாதி ராஜா, பயர்மேன், பாஸ்கர் தி ராஸ்கல் எளிதாக ரசிகர் மனதில் பதியும்படி பார்த்துக் கொண்டார் மம்முட்டி. கடந்த மாதம் வெளியான அச்சா தின், உடோபியாயிலே ராஜாவு, பாதமாறி ஆகிய பட டைட்டில்கள் புதுமையாக இருந்தாலும் மனதில் பதிய முடியாது என்பதை மம்முட்டி உணர்ந்திருந்தார்.
அதனால் மம்முட்டியும் நயன்தாராவும் இணைந்து நடிக்கவிருக்கும் படத்திற்கு முதலில் சாலமோண்டே கூடாரம் என்று பெயர் வைத்த இயக்குநர் ஏகே.சாஜனிடம், மம்முட்டி டைட்டிலை மாற்றச் சொல்லி தற்போது இப்படத்தின் தலைப்பு புதிய நியமம் (புதியசட்டம்) என வைக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions