தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் : மகேஷ் பாபு

Bookmark and Share

தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் : மகேஷ் பாபு

பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு நடித்துள்ள படம் ‘ஸ்ரீமந்த்துடு’ இது ‘செல்வந்தன்’ என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 7–ந்தேதி திரையிடப்படுகிறது. 

இதுகுறித்து நடிகர் மகேஷ் பாபு சென்னையில் தமிழில் அளித்த பேட்டி வருமாறு:– நான் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான் தமிழில் நன்றாக பேசுவேன். தெலுங்கில் பட வாய்ப்பு கிடைத்ததால் தெலுங்கு பட ஹீரோ ஆனேன். 

தமிழில் நடிக்க வேண்டும் என்பதும் எனது ஆசை. தெலுங்கில் நான் நடித்துள்ள படம் ‘ஸ்ரீமந்த்துடு’ இதற்கு ‘பணக்காரன்’ என்பது பொருள். எனவே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள படத்துக்கு ‘செல்வந்தன்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். 

இது கிராம சூழ்நிலையில் எடுக்கப்பட்டுள்ள படம். தற்போது நான் 'பிரமோற்சவம்' படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறேன். அடுத்து தொடர்ந்து தமிழில் நடிப்பேன். தெலுங்கில் நான் நடிக்கும் போது தமிழிலும் அதே படத்தை எடுக்கலாம் என்று யோசனை கூறினார்கள். அதை நிச்சயம் செயல்படுத்துவேன். 

'செல்வந்தன்' படத்தை கொரட்டால சிவா இயக்கி இருக்கிறார். எனது ஜோடியாக சுருதிஹாசன் சிறப்பாக நடித்து இருக்கிறார். ‘பாகுபலி’ படம் வெளியான போது இந்த படமும் வெளியாக இருந்தது.

அது ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரான படம். எனவே, சில வாரங்கள் அது ஓட வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தாமதமாக ரிலீஸ் செய்ய முடிவு எடுத்தோம். இனி தொடர்ந்து எனது படங்கள் தமிழில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions