ஸ்ரீமந்துடு ரிலீஸ் தள்ளி போகின்றது...!

Bookmark and Share

ஸ்ரீமந்துடு ரிலீஸ் தள்ளி போகின்றது...!

பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது. வரும் ஜூலை 17ம் தேதி ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில், ஸ்ரீமந்துடு படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதியை வரும் ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

என்ன காரணத்திற்காக ஸ்ரீமந்துடுவின் ரிலீசை சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.  இந்நிலையில், டோலியுட்டின் மிகப்பிரம்மாண்டமான காவியமான பாகுபலி வரும் ஜூலை 10ம் தேதி ரிலீசாகிறது.

பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கும் இந்த படத்தில் பிரபல ஹீரோவான யங் ரிபல் ஸ்டார் பிரபாஸ், ரானா டகுபதி, பிரபல நடிகைகளான அனுஷ்கா மற்றும் தமன்னா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் ஜொலிக்க இருக்கின்றனர்.

இந்த படத்தோடு ஸ்ரீமந்துடு போட்டி போட தயாராக இல்லை என்று கூறப்படுகின்றது. அதனால் தான் ஸ்ரீமந்துடுவின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் கோரடல சிவா இயக்கும் ஸ்ரீமந்துடுவில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக அழகு தேவதையான ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

பிரபல இசை அமைப்பாளர் ஸ்ரீ தேவி பிரசாத் இசை அமைக்கிறார். இந்த படம் குடும்ப சென்டிமென்டோடு ஆக்ஷன் கலந்து வழங்கப்பட இருக்கின்றது.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions