தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்த சிவகார்த்திகேயன்

Bookmark and Share

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்த சிவகார்த்திகேயன்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் முதலானாவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் நடித்த படங்கள் தெலுங்கில் சூப்பர், டூப்பர் ஹிட்டாகும். தெலுங்கில் இவர் நடித்த ‘ஒக்கடு’ தமிழில் ‘கில்லி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.

சமீபத்தில்கூட பிரபல போர்ப்ஸ் பத்திரிகை நடத்திய இந்தியாவின் தலைசிறந்த பிரபலங்கள் பட்டியலில் தென்னிந்திய நடிகர்களில் மகேஷ் பாபு தான் முன்னணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனும், மகேஷ் பாபுவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இருவரும் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளனர். இதனை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, நான் மகேஷ் பாபு அவர்களை சந்தித்தேன். அவர் மிகவும் எளிமையானவர். தன்னடக்கம் உள்ளவர். எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு அவருக்கு நன்றி. அவரை சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட்டாகியுள்ளது. தற்போது இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘காக்கிச்சட்டை’ படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions