பிரின்சை கோபத்திற்கு ஆளாக்கிய பிரபல இயக்குனர்....

Bookmark and Share

பிரின்சை கோபத்திற்கு ஆளாக்கிய பிரபல இயக்குனர்....

பிரின்ஸ் மகேஷ் பாபு செம கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. அவர் பாகுபலி படக்குழுவினர் மீது தான் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கு என்ன காரணம் என்னவெனில் மே மாதத்தில் பாகுபலி படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக அந்த படத்தின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி கூறி இருந்தார்.

ஆனால் அந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்க்ஷன் வேலை முடியாத காரணங்களுக்காக சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பிரின்ஸ் மகேஷ் தற்போது பிரபல இயக்குனர் கோரடல சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு படத்தில் நடித்துள்ளார்.

அவர் இந்த படத்தை முதலில் மே மாதத்தில் ரிலீஸ் செய்ய எண்ணினார். ஆனால் அவர் பாகுபலியுடன் சேர்ந்து தனது படத்தை ரிலீஸ் செய்ய விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால் ஸ்ரீமந்துடுவை ஜூலை மாதம் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பாகுபலியும் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகின்றது. இரண்டு முக்கியமான படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசானால் வசூலில் சிக்கல் ஏற்படும்.

மேலும் ஒரே நேரத்தில் மிகப்பெரிய தொகையை கொடுத்து இரண்டு படங்களையும் வாங்க சிலர் தடுமாறி வருவதாகவும் தெரிகிறது. ஆனால் பிரின்ஸ் மகேஷ் பாபு தனது ஸ்ரீமந்துடுவை ஜூலை மாதத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions