50 வயது நடிகை மீது ஆசைப்படும் மகேஷ்பாபு

Bookmark and Share

50 வயது நடிகை மீது ஆசைப்படும் மகேஷ்பாபு

எத்தனை வயதானாலும் ஆண்கள் மட்டும்தான் கம்பீரமாக, அழகாக இருப்பார்களா என்ன, சில பெண்களைப் பார்த்தால் அவ்வளவு இளமையாக இருப்பார்கள், ஆனால் வயதைக் கேட்டால் கண்டிப்பாக ஐம்பதைக் கடந்திருக்கும்.

இந்தியத் திரையுலகத்தில் முப்பது வயதைக் கடந்தாலே பெரும்பாலான நடிகைகளுக்கு விஆர்எஸ் கொடுத்து விடுவார்கள். ஆனால், ஹாலிவுட்டில் அதற்குப் பிறகுதான் அவர்கள் முன்னணி இடத்திற்கே வருவார்கள்.

ஹாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கிய பல ஹீரோயின்கள் அவர்களது முப்பது வயதிற்குப் பிறகுதான் முன்னணிக்கே வந்திருக்கிறார்கள். நம் ஊரில் இன்னும் இளமையாக இருக்கும் நடிகையாக ஸ்ரீதேவியை வேண்டுமானால் சொல்லலாம்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தன் மனம் கவர்ந்த நடிகை என ஹாலிவுட் நடிகை டெமி மூர் என மகேஷ்பாபு சொல்லியிருக்கிறார். அவருடன் ஒரு நாளாவது 'டேட்டிங்' போக வேண்டும் என தன் மனைவி இருக்கும் போதே சொல்லி கலகலப்பான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

டெமி மூர் வயது 50 என்பது குறிப்பிடத்தக்கது. 50 வயதானாலும் அவர் இன்னமும் ஹாட் ஆகவே இருக்கிறார். அவருடன் ஒரு நாள் பொழுதைக் கழித்து அவருடன் உணவருந்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் மகேஷ்பாபு. காதலுக்குத்தான் கண்ணில்லை என்பார்கள், அழகை ரசிப்பதற்கும் வயதில்லை என்பதும் உண்மைதான்.


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions