மகேஷ் பாபு பட தலைப்பு மாற்றம் ?

Bookmark and Share

மகேஷ் பாபு பட தலைப்பு மாற்றம் ?

டோலிவுட்டின் பிரின்சஸ் நடிகர் மகேஷ் பாபு, தற்போது இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் தலைப்பு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்ருதிஹாசன் முதன் முறையாக மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள், தற்போது ஐதராபாத்தில் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

 ஸ்ரீமந்துடு என்ற பெயரிலேயே ஊடகங்களில் அறியப்பட்டு வரும் மகேஷ் பாபுவின் இப்பட தலைப்பு தற்போது மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு மகடு என்று பெயரிடப்படலாம் என்று கூறப்படுகின்றது.

எனினும் இது குறித்த அதிகாரப் பூர்வ தகவல் எதுவும் இல்லை. இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டிரைலர் மே 31 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்போது இப்படத்தின் உறுதிப் படுத்தப்பட்ட தலைப்பு அறிவிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions