ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கப்போகும் மகேஷ் பாபு!

Bookmark and Share

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கப்போகும் மகேஷ் பாபு!

தெலுங்கு சினிமாவின் மாஸ் மற்றும் ஸ்டைல் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தற்போது ஸ்ரீமந்துடு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தை முடித்த கையோடு அவரின் அடுத்த படங்களின் இயக்குநரையும் தேர்வு செய்துவிட்டாராம் மகேஷ் பாபு.

முதலில் இயக்குநர் ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கத்தில் பிரம்மோற்சவம் என்ற படத்தில் நடிக்க திட்டமிட்ட மகேஷ் பாபு திடீரென தற்போது இயக்குநர் த்ரிவிக்ரமை அழைத்து ஒரு பக்காவான ஆக்ஷன் கதையை தயார் செய்ய சொல்லியிருக்கிறாராம்.

பிரம்மோற்சவம் படம் துவங்கி நடைபெறும்போதே த்ரிவிக்ரம் படத்தையும் சேர்த்து நடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறாராம் மகேஷ் பாபு. இதற்கு சில காரணங்களும் இருக்கிறது.

தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமந்துடு படம் குடும்பங்கள் கொண்டாடும் ஃபேமிலி எண்டர்டெய்ணராக இருக்கும் என்றும் இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் பிரம்மோற்சவம் படமும் அதேபாணியில் ஃபேமிலி எண்டர்டெய்னர் என்பதனால் இந்த இரண்டு படங்களுக்கு இடையே ஒரு ஆக்ஷன் கதையில் நடித்துவிடலாம் என்று கணக்குப்போட்டுத்தான் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் மகேஷ் பாபு.பிரம்மோற்சவம் படம் வரும் ஜூலை மாதம் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions