நான் கமல்ஹாசன் ரசிகன் - மகேஷ் பாபு பேச்சு

Bookmark and Share

நான் கமல்ஹாசன் ரசிகன் - மகேஷ் பாபு பேச்சு

தெலுங்கு தேசத்தில் பொது மேடையில் தமிழ் நடிகர் ஒருவரின் ரசிகன் நான் என ஒரு முன்னணி ஹீரோ பேசுவது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

அதுவும் மேடையில் இரண்டு சீனியர் நடிகர்களான வெங்கடேஷ், ஜெகபதிபாவு ஆகியோர் இருக்கும் போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி ஹீரோவான மகஷ்பாபு பேசுகிறார் என்றால் அதை தெலுங்கு மீடியாக்கள் நிச்சயம் வித்தியாசமாகவே பார்ப்பார்கள்.

இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற ஸ்ரீமந்துடு இசை விழாவில்தான் நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மகேஷ்பாபு. பொதுவாக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்றவர்களின் ரசிகன் என்றுதான் சொல்வார்கள்.

ஆனால், மகேஷ்பாபு அப்படியெல்லாம் பேசாமல் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சென்னையில் படித்து வளர்ந்த அவருடைய பாசம் தமிழ் நடிகரான கமல்ஹாசன் மீது இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

விழாவில் அவர் பேசியதாவது, “நான் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகன். அவர் மகளுடன் நான் நடிப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. ஸ்ருதிஹாசன் மிகத் திறமையான நடிகை. சிறப்பாக நடனம் ஆடுபவர், சிறந்த பாடகி, அவரிடம் நல்ல திறமைகள் உள்ளன.

இந்தப் படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க,” என்றார் மகேஷ் பாபு. தெலுங்கு தேசத்தில் பிறந்து தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்களில் நடித்து வளர்ந்த சுரேஷ் போன்ற நடிகர்கள், பாகுபலியில் தமிழ் நடிகர்கள் நடிக்க வைத்ததைப் பற்றி தேவையில்லாத கருத்து சொல்லி விளம்பரம் தேடிக் கொண்டார்கள்.

இதைக் கூட அவரைப் போன்றவர்கள் ஏதாவது கமெண்ட் அடித்து அடுத்த விளம்பரத்தைத் தேடிக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions