மீண்டும் டப்பிங்கில் பிசியான மகேஷ் பாபு

Bookmark and Share

மீண்டும் டப்பிங்கில் பிசியான மகேஷ் பாபு

டோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமந்துடு படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

மிர்ச்சி படப் புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்கும் ஸ்ரீமந்துடு படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகின்றன. ஜூலை மாத துவக்கத்தில் இப்படத்தின் முதல் பாதிக்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வந்த மகேஷ் பாபு தற்போது இரண்டாம் பாதிக்கான டப்பிங்கில் பிசியாகியுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடிக்கும் பிரமோற்சவம் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. ஸ்ரீமந்துடு படத்தின் டப்பிங் பணிகளை முடித்த பின்னர் பிரமோற்சவம் படத்தின் படப்பிடிப்புகளில் மகேஷ் பாபு கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions