மகேஷ் பாபு நடிப்பில் கோலிவுட்டிற்கு வரும் செல்வந்தன்

Bookmark and Share

மகேஷ் பாபு நடிப்பில் கோலிவுட்டிற்கு வரும் செல்வந்தன்

சென்னையில் பிறந்து வளர்ந்த டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தற்போது கோலிவுட் மீது தனது பார்வையைத் திருப்பியுள்ளார். இவரது தெலுங்கு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவரும்.

அந்த வகையில் கோலிவுட்டிலும் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் ஏராளம். இதனால் மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்கு திரைப்படம் பிரமோற்சவம் நேரடி தமிழ் படம் போன்று உருவாகின்றது.

டோலிவுட் வெற்றிப் பட இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தயாரித்து  நடிக்கும் ஸ்ரீமந்துடு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட மகேஷ் பாபு திட்டமிட்டுள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தமிழில் செல்வந்தன் என்ற பெயரில் ஸ்ரீமந்துடு படம்  திரைக்கு வரவுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது.

குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ஸ்ரீமந்துடு படத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்தும் சொல்லப்படுள்ளதாக இயக்குநர் கூறுகின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions