அறிமுக நாயகன் நவீனுக்கு மகேஷ் பாபு வாழ்த்து

Bookmark and Share

அறிமுக நாயகன் நவீனுக்கு மகேஷ் பாபு வாழ்த்து

டோலிவுட்டில் அறிமுக இயக்குநர்  ராம் பிரசாத் இயக்கும் ஐனா இஷ்டம் நுவ்வு என்ற படத்தில், நவீன் நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தில் பிரபல  நடிகை மேனகாவின் மகள்  கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கின்றார்.

பிரண்ட்லி மூவிஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டோலிவுட்டின் இளவரசன் மகேஷ் பாபுவையும் கவர்ந்துள்ளது.

இதனை மகேஷ் பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஐனா இஷ்டம் நுவ்வு படத்தின்  பஸ்ட் லுக் போஸ்டர் ரசிக்கும்படி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நவீன் மற்றும் படக்குழுவினருக்கு மகேஷ் பாபு வாழ்த்து தெரிவித்துள்ளார். நவீன் மகேஷ் பாபுவின் அண்ணன் நரேஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions