சமூக வலைத்தள மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹீரோ!

Bookmark and Share

சமூக வலைத்தள மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹீரோ!

சமூக  வலைத்தளங்களில் ஹீரோ, ஹீரோயின்களை ஒருபுறம்  புகழ்வதும், மறுபுறம் கலாட்டா செய்வதும் வாடிக்கையாகி வருகின்றது. சில நேரங்களில் பெரிய கருத்து மோதல் ஏற்பட்டு விடுகிறது.

அதாவது சமூக  வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட ஹீரோ அல்லது ஹீரோயின் பற்றி அவர்களது ரசிகர்கள் பாராட்டி பல செய்திகளை பகிர்ந்து கொள்வது வழக்கம்.

அதே சமயத்தில் இந்த செய்திகளுக்கு எதிர்மறையான கருத்துகளை சிலர் பதிவு செய்கின்றனர். இதனை தொடர்ந்து சமூக  வலைத்தளங்களில் ஒரு நீண்ட கருத்து போரே நடக்கும். தற்போது பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ரசிகர்களும், எதிர் கருத்துகளை கொண்டவர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அதாவது வட அமெரிக்க தெலுங்கு சங்கத்தினர் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மகேஷ் பாபு ரூ 1.5 கோடி சம்பளமாக வாங்கினார் என்று கூறப்பட்டது.

அதனை அடுத்து சமூக  வலைத்தளங்களில் அவரை பற்றி விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் சமூக  வலைத்தளங்களில் அந்த பணத்தை ஹீல்எசைல்ட் என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து பிரின்ஸ் மகேஷ் பாபுவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளியானதை அடுத்த மகேஷ் பாபு தனது அமெரிக்கா நிகழ்ச்சியை ரத்து செய்து இருக்கிறார்.

அந்த சங்கத்துடனான பண விவகாரத்தையும் பைசல் பண்ணியதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் சமூக  வலைத்தள மோதலுக்கு மகேஷ் பாபு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions