மீண்டும் இணையும் போக்கிரி பட கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் இணையும் போக்கிரி பட கூட்டணி!

தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘போக்கிரி’ படம், தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ‘போக்கிரி’ படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 

தெலுங்கில் வெளிவந்த ‘போக்கிரி’ படத்தை பூரி ஜெகந்நாத் என்ற பிரபல இயக்குனர் இயக்கியிருந்தார். இப்படம் அங்கு பெரிய அளவில் ஹிட்டாகவே, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர், டூப்பர் ஹிட்டாகின.

இப்படத்தை தொடர்ந்து மகேஷ்பாபுவும், பூரி ஜெகந்நாத்தும் ‘பிசினஸ்மேன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்தனர். இந்த படமும் சூப்பர், டூப்பர் ஹிட்டாகியது. இந்நிலையில், தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

தெலுங்கில் ‘போக்கிரி’ படம் வெளியாகி நேற்றோடு 10 வருடம் ஆனநிலையில், இவர்கள் இணையும் புதிய படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளர். அந்த படத்திற்கு ‘ஜனகனமன’ என்று தேசிய கீதத்தின் முதல் வரியை வைத்துள்ளார்கள். 

மகேஷ்பாபு-பூரி ஜெகந்நாத் கூட்டணியில் உருவான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில், இந்த படமும் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions