ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் மகேஷ் பாபு ?

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் மகேஷ் பாபு ?

கஜினி படத்தின் மூலம் இந்தியத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன் பின் அவருடைய இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆர்வத்துடன் இருந்தனர்.

அவர்களில் விஜய்க்குத்தான் முருகதாஸ் இயக்கத்தில் தொடர்ந்து துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான ஆமீர் கானே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனராக முருகதாஸ் இருக்கிறார்.

இயக்குனர் ஷங்கருக்குக் கூட கிடைக்காத வெற்றி முருகதாஸுக்கு ஹிந்தித் திரையுலகிலும் கிடைத்தது.தற்போது சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் அகிரா என்ற ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை இயக்கி முடித்ததும் மீண்டும் தமிழில் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்தப் படத்தில் நடிக்க விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.

அதே சமயம் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகனான மகேஷ் பாபு, முருகதாஸ் இயக்கத்தில் நாயகனாக அந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ள இந்தப்படம் முற்றிலும் ஒரு ஆக்ஷன் படமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். தமிழ் ஹீரோக்கள் நடித்தால் தெலுங்கில் எப்படி வரவேற்பு இருக்கும் என்று தெரியாது.

விஜய்க்கும், சூர்யாவுக்கும் தெலுங்கு பேசத் தெரியாது. ஆனால், சென்னையில் பிறந்து வளர்ந்து படித்த மகேஷ் பாபு தமிழ், தெலுங்கு இரு மொழிகளையும் சரளமாகப் பேசுவார். அதனால்தான், முருகதாஸ் படத்தில் அவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்ற பேச்சு பலமாக உள்ளது.


Post your comment





Related News
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions