மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு

Bookmark and Share

மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு

தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் மகேஷ்பாபு நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஸ்பைடர்’ படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இந்த படத்தின் மூலம் மகேஷ் பாபு தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.  

இந்நிலையில் மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ‘பாரத் அனே நேனு’ என்ற தெலுங்கு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. கொரதலா சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மகேஷ் பாபு அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். 

அவருக்கு ஜோடியாக டோனி வாழ்க்கைப் படத்தில் நாயகியாக நடித்த கியாரா அத்வானி நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளதால், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் மகேஷ் பாபு தனது மனைவிக்கு முத்தம் கொடுத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions