பிரமோற்சவம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் மகேஷ்பாபு

Bookmark and Share

பிரமோற்சவம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் மகேஷ்பாபு

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்ரீமந்துடு திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. அதற்கான இறுதிக் கட்ட பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தைத் தொடர்ந்து  மகேஷ்பாபு நடிக்கும் பிரமோற்சவம் படத்தின் பூஜை கடந்த மே 31 ஆம் தேதி நடைபெற்றது. ஜூலை 10 ஆம் தேதி முதல் இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் துவங்கின.இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படத்தை பிவிபி நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் பாபு தயாரிக்கின்றார்.

ஸ்ரீமந்துடு படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த மகேஷ் பாபு ஜூலை மூன்றாவது வாரத்திலிருந்து  பிரமோற்சவம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.சமந்தா, பிரனிதா, காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது.

இசையமைப்பாளர் மிக்கி ஜெ மேயர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகளை  டிசம்பர் மாதம் வரை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி படத்தை திரையிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions