ராம் சரண் மறுத்த படத்தில் மகேஷ் பாபு?

Bookmark and Share

ராம் சரண் மறுத்த படத்தில் மகேஷ் பாபு?

டோலிவுட்டில் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை அனுஷ்கா நடிப்பில் இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் வெளிவந்த மிர்ச்சி  படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்படத்தை தொடர்ந்து சிவா இயக்கும் படத்தில் ராம் சரண் நாயகனாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டு பூஜையும் நடைபெற்றது. ஆனால் ராம் சரணிற்கு படத்தின் கதை பிடிக்காததால் அதிலிருந்து அவர் விலகி விட்டார். 

தற்போது புரூஸ்லீ படத்தில் ராம் சரண் நடித்து வருகின்றார். இயக்குநர் கோரடலா சிவா மகேஷ் பாபு நடிப்பில் ஸ்ரீமந்துடு படத்தை இயக்கி வருகின்றார். ராம் சரண் நடிக்க மறுத்த படத்தில் மகேஷ் பாபு நடித்து வருவதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதனை இயக்குநர் கோரடலா சிவா மறுத்துள்ளார். ராம் சரணுக்கு தான் கூறிய கதை வேறு என்றும் தற்போது மகேஷ் பாபு நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தின் கதை வேறு என்றும் சிவா விளக்கமளித்துள்ளார். மகேஷ் பாபுவுடன் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் ஸ்ரீமந்துடு படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions