மகேஷ்பாபுவுக்கு வில்லனாக எஸ்.ஏ.சூர்யாவா?

Bookmark and Share

மகேஷ்பாபுவுக்கு வில்லனாக எஸ்.ஏ.சூர்யாவா?

தமிழில் ‘கத்தி’ படத்திற்கு பிறகு இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘அகிரா’ படத்தை ரொம்பவும் பிசியாக இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தின் ஹீரோவாக இரு மொழிகளிலும் பரிச்சயமான மகேஷ்பாபு நடிக்கவிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இப்படத்தில் யார் வில்லனாக நடிப்பார் என்பதுதான் நீண்ட கேள்வியாக இருந்து வந்தது. எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், இதுகுறித்து யாரும் வாய் திறக்கவே இல்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது.

இதுகுறித்து, ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது வாய் திறந்துள்ளார். அவர் கூறும்போது, மகேஷ்பாபு படத்தில் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கவில்லை. இதில் நடிக்கச் சொல்லி யாரும் அவரை அணுகவில்லை. அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கப்போவதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற செய்திக்கு எந்த விளக்கமும் அளிக்காத ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது அக்ஷய் குமார் நடிக்கப் போகிறார் என்ற செய்திக்கு மட்டும் விளக்கம் அளித்திருப்பதால், எஸ்.ஜே.சூர்யாதான் இப்படத்தின் வில்லனாக இருப்பார் என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions