மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?

Bookmark and Share

மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?

தமிழ் சினிமாவில் வரும் 27-ம் தேதி மூன்று படங்கள் வெளியாகின்றன, ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வரும் கருப்பன் , கவுதம் கார்த்திக், நிக்கில் கல்ராணி ஆகியோர் நடிப்பில் அடலன்ட் காமெடி படமான ஹரஹர மகா தேவகி மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் ஆகியவை தான் அந்த மூன்று படங்கள்.

முதலில் மகேஷ் நடிக்கும் படதின் மீது எதிர்பார்ப்புகள் இருந்தாலும் தற்போது ஸ்பைடர் தமிழில் டப்பிங் படம் என்பது போல தோன்றுவதாலும் விஜய் சேதுபதியின் படம் வெளிவருவதால் கருப்பன் படம் வெளி வருவதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

அதேபோல் கெளதம் கார்த்திக், நிக்கில் கல்ராணி ஆகியோர் நடிப்பிலும் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்திலும் உருவாகி உள்ள ஹரஹர மகா தேவகி படமும் வெளியாக உள்ளது, இந்த படத்தை எஸ். தங்கராஜ் தயாரித்துள்ளார். அடலன்ஸ் காமெடி படம் என்பதால் இந்த படத்திற்கு அளவு கடந்த எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படமும் வெளியாக உள்ளது, ஆனால் மகேஷ் பாபுவிற்கு இது முதல் தமிழ் படம் என்பதாலும் பலருக்கு இது நேரிடை தமிழ் படமா? அல்லது டப்பிங் படமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் மகேஷ் பாபுவை விட விஜய் சேதுபதி தமிழில் மாஸான நடிகர் என்பதாலும் ஸ்பைடர் படத்தை காட்டிலும் கருப்பன் மற்றும் ஹரஹர மகாதேவகி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் ஸ்பைடர் படம் ரசிகர்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
இனி அப்படி செய்யமாட்டேன், போராடிச்சுடும் - விஜய் சேதுபதி அதிரடி
நூறு திரையரங்குகளுக்கு மேல் அதிகரித்துள்ள ‘கறுப்பன்’ - பிச்சர்ஸ் பாக்ஸ் அலெக்ஸாண்டர்
வைரலாகும் பிரபல நடிகரின் நியூவ் கெட்டப் புகைப்படம் - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
விஜய் சேதுபதியின் அடுத்த படம் ஆரம்பம்
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!
சமீபத்தில் வெளியான படங்களிலேயே இது தான் செம படம் - புகழும் மெகா ஹிட் நடிகர்.!
தமிழக பாக்ஸ் ஆபீசை திணற வைத்த ஸ்பைடர் - பிரம்மாண்ட வசூல் நிலவரம் இதோ.!
ஸ்பைடர் படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் என்ன தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions