தனது சாதனையை தானே முறியடித்த பிரபல நடிகர்

Bookmark and Share

தனது சாதனையை தானே முறியடித்த பிரபல நடிகர்

பிரின்ஸ் மகேஷ் பாபு தனது சாதனையை தானே முறியடித்து இருக்கிறார். அவர் தற்போது நடித்துள்ள படம் ஸ்ரீமந்துடு ஆகும். தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஒரு பிரபல டி வி நிறுவனம் ரூ 11.5 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பிரின்சின் ஆகடு படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ 9.75 கோடி கொடுத்து வாங்கப்பட்டது. அதுவே ஒரு படத்தின் சாட்டிலைட் உரிமை அவ்வளவு பெரிய தொகைக்கு கொடுக்கப்பட்டது ஒரு சாதனையாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் பிரின்சின் ஸ்ரீமந்துடு படத்தின் சாட்டிலைட் உரிமை தற்போது ரூ11.5 கோடிக்கு கொடுக்கப்பட்டு இருப்பதன் மூலன் அவரே தனது முந்தைய சாதனையை முறியடித்து இருக்கிறார். பிரபல இயக்குனர் கோரடல சிவா இயக்கும் ஸ்ரீமந்துடுவில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக அழகு தேவதையான ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

பிரபல இசை அமைப்பாளர் ஸ்ரீ தேவி பிரசாத் இசை அமைக்கிறார். விரைவில் வெளிவர உள்ள இந்த படம் குடும்ப சென்டிமென்டோடு ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்று பிரின்சின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

 

 

 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions