மகேஷ் பாபு தனிஒருவன் ரீமேக்கில் நடிக்கவில்லை!

Bookmark and Share

மகேஷ் பாபு தனிஒருவன் ரீமேக்கில் நடிக்கவில்லை!

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி, நடிகை நயன்தாரா, நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. இப்படத்தை டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு விரும்பி பார்த்ததாகவும், அவர் தனி ஒருவன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிடுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.

தனி ஒருவன் தெலுங்கு ரீமேக் குறித்து மகேஷ் பாபு கூறுகையில், அப்படத்திற்கு எழுந்த நேர்மறையான விமர்சனங்களை கேள்விப்பட்டு அப்படத்தை பார்க்க விரும்பியதாகவும் ராஜா தனி ஒருவன் படத்தை அருமையாக இயக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பும் கதையின் கருவும் தன்னை மிகவும் கவர்ந்ததாக மகேஷ் பாபு தெரிவித்தார். ஆனால் இப்படத்தை ரீமேக் செய்யும் எண்ணம் தனக்கில்லை என்றும், கடந்த 16 ஆண்டு கால திரை உலக வாழ்க்கையில் ரீமேக் படங்களில் நடித்ததில்லை என்ற சாதனையை தான் உடைக்க விரும்பவில்லை என்றும் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார். மகேஷ் பாபு விருப்பம் தெரிவிக்காததால் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் ராம் சரண் நடிக்கக் கூடும் என கூறப்படுகின்றது

 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions