பிரபல இயக்குனர் - ஹீரோ இடையே பனிப்போர்?

Bookmark and Share

பிரபல இயக்குனர் - ஹீரோ இடையே பனிப்போர்?

சினிமா துறையில் சில சமயங்களில் பிரபல இயக்குனர்களுக்கும், பிரபல ஹீரோக்களுக்கும் இடையே பனிப்போர் ஏற்படுவதுண்டு. அது காலப்போக்கில் சரியாகி விடுவதும் வாடிக்கையான ஒன்று தான்.

தற்போது டோலிவுட்டில் பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், சன் ஆப் சத்யமூர்த்திக்கு பிறகு பிரபல ஹீரோவான மகேஷ் பாபுவுடன் இணைந்து ஒரு படம் பண்ணப்போவதாக கூறியிருந்தார்.

ஆனால் தற்போது சன் ஆப் சத்யமூர்த்தி ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில், இயக்குனர் திரிவிக்ரம் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார். மேலும் மகேஷ் பாபுவுக்காக தன்னிடம் தற்போது கதை ஒன்றும் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

தற்போது மகேஷ் பாபு நடித்து வரும் பிரம்மோத்சவம் ஒரு குடும்ப பாங்கான கதை அம்சம் கொண்ட படமாகும். அதனால் அவர் தான் நடிக்கும் அடுத்த படம் பக்க பொழுதுபோக்கு படமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறப்படுகின்றது.

அவர் தனக்கென அது போன்ற பொழுதுபோக்கு அம்சம் கொண்ட கதையை தயார் செய்யும் படி இயக்குனர் திரிவிக்ரமிடம் கூறியதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் திரிவிக்ரம் சமீபமாக குடும்ப கதைகளிலே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் டோலிவுட்டில் இருவரும் மீண்டும் இணைவார்களா...  என்ற கேள்வி எழுந்துள்ளது.?!


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions