மகேஷ் பட், கரண் ஜோகருக்கு நவநிர்மாண் சேனா எச்சரிக்கை

Bookmark and Share

மகேஷ் பட், கரண் ஜோகருக்கு நவநிர்மாண் சேனா எச்சரிக்கை

உரி பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்திய மொழி படங்களில் நடிக்கும் பாகிஸ்தான் நடிகர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மராட்டிய நவநிர்மாண் சேனா கெடு விதித்திருந்தது.

இந்த நிலையில், அக்கட்சியின் திரைப்பட பிரிவு தலைவர் அமேய் கோப்கர் மும்பையில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது, இந்தி திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். அவர் கூறியதாவது:-

உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக பாகிஸ்தான் நடிகர்களுடன் பணிபுரிய கூடாது என்று திரையுலகினரிடம் நாங்கள் கேட்டு கொண்டோம். ஆனாலும், எங்களது வேண்டுகோளுக்கு தயாரிப்பாளர்கள் மகேஷ் பட்டும், கரண் ஜோகரும் சாதகமான பதில் தரவில்லை. அவர்கள் பாகிஸ்தான் நடிகர்களுடன் இணைந்து தொடர்ந்து பணிபுரிந்தால், எங்களது பதிலடியை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த ‘ஏ தில் ஹேய் முஸ்கில்’ மற்றும் ‘ரயீஸ்’ ஆகிய படங்கள் வெளியாவதை எங்களது தொண்டர்கள் எதிர்ப்பார்கள். பாகிஸ்தான் நடிகர்கள் எங்களது படங்களில் இடம்பெற மாட்டார்கள் என்று ஷாருக்கானும், கரண் ஜோகரும் இதுவரை எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எந்தவொரு உறுதிமொழியும் அளிக்கவில்லை. பாகிஸ்தான் நடிகர்களுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். அவர்களது படங்களை நாங்கள் எதிர்ப்போம். ‘ஏ தில் ஹேய் முஸ்கில்’ மற்றும் ‘ரயீஸ்’ ஆகிய படங்களை வெளியாகாமல் முடக்குவோம்.

இதற்காக எங்கள் தொண்டர்கள் ஜெயிலுக்கு போகவும் தயாராக இருக்கின்றனர். இந்த இரண்டு படங்களின் ரிலீசையும், எங்களுக்கே உரித்தான பாணியில் முடக்குவோம். வருங்காலத்தில், பாகிஸ்தான் நடிகர்களை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் மகேஷ் பட்டும், கரண் ஜோகரும் துணிந்தால், அவர்களை வீதியில் வைத்து அடித்து உதைப்போம். பாகிஸ்தான் நடிகர்களையும் தாக்குவோம்.

முதலில் தேசமும், ராணுவ வீரர்களும் தான் முக்கியம். கலை அதற்கு அடுத்தது தான். என்னுடைய வார்த்தைகளை சிலர் மிரட்டலாக எடுத்து கொண்டால், அப்படியே இருக்கட்டும்.

இவ்வாறு அமேய் கோப்கர் தெரிவித்தார்.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions