டோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகும் மகிமா

Bookmark and Share

டோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகும் மகிமா

சாட்டை படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமான மலையாள நடிகை மகிமா அப்படத்தைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, மொசக்குட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மகிமா தெலுங்கு திரைப்படமொன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன் சாய் ராம் ஷங்கர் நடிக்கும்  வாடு நீனு காடு  எனும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முதல் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நடிகை மகிமா, நாயகன் சாய் ராம் ஷங்கருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். வினோத் விஜயன் இயக்கம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் துவக்க விழாவில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ்,கன்னட,மலையாள மற்றும் போஜ்புரி மொழிகளிலும் திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?
மிகவிரைவில் வெளியாகவிருக்கும் விருவிருப்பான படம் "தடம்"
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஜி.வி.பிரகாசுடன் நடித்தது ஜாலியாக இருந்தது: மகிமா நம்பியார்
த்ரில்லர் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாகும் மகிமா நம்பியார்
குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்
என்னுடைய கனவு நாயகன் அஜித் போல் இருக்க வேண்டும்- பிரபல நாயகி
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான சாட்டை நடிகை
பொங்கல் அன்று வெளியாகிறது ‘குற்றம் 23’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions