மய்யம் படத்தில் மையம் கொண்ட புதுமைகள்

Bookmark and Share

மய்யம் படத்தில் மையம் கொண்ட புதுமைகள்

டிசைனர் ஏ.பி.ஸ்ரீதர் தயாரித்துள்ள படம் மய்யம் .இப்படத்தின் தலைப்பு கமல் நடத்திய மய்யம் பத்திரிகையுடையது என்பதால் கமலிடம் அனுமதிபெற்று பயன்படுத்தியுள்ளார். இதன் அறிமுகவிழாவில் படக்குழுவினரை ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார்.

இயக்குநர் உள்பட பெரும்பாலும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் படத்தில் பணிபுரிந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் மேடையேற்றி அவரவர் செய்த பணிகளைக் கூறினார் தயாரிப்பளர் ஸ்ரீதர். இதில் வேடிக்கை  தயாரிப்பாளர் ஸ்ரீதரைப் போலவே வந்திருந்த புதியவர்கள் 16 பேரில் 14 பேர் தாடி வைத்திருந்தார்கள்.  

ஹர்வெஸ்ட் எண்டர்டெய்னர்ஸ்,ஸ்கெட்ச் புக் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள மய்யம் படம் ,தமிழில் முதல் கொரில்லா மூவி மேக்கிங் ரகப்படம்..

கல்லூரிப் படிப்பிலிருக்கும் இயக்குநர் ஆதித்யா பாஸ்கரன் சேர்த்து இளைஞர்கள் 12 பேர் முக்கிய பங்காற்றியுள்ள படம்.. ஆதித்யா பாஸ்கரன் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை.

சினிமா படப்பிடிப்பு கூட பார்த்தரியாதவர். க்ளைமாக்ஸ் காட்சியாக இடம் பெறும் காட்சியே முதலில் படமாக்கப்பட்ட படம். ஒரே இரவில் நடக்கும் கதையான இப் படத்தில் 7 மர்ம முடிச்சு போன்ற திருப்பங்கள் இருக்கின்றன.   பத்துக்குப் பத்து அறையில் 55 நிமிடங்கள் ஒருகாட்சியாக வருகின்றது.

இப்படத்தில் ரோபோ சங்கர் முக்கிய வேடமேற்றுள்ளார். படப்பிடிப்பே பார்க்காத இளைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ள படம். கதாநாயகன் நவீன் சஞ்சய்க்கு படத்தில் வசனமே இல்லை. இவ்விதம் மய்யம் படத்தில் புதுமைகள் பல மையம் கொண்டிருக்கின்றன.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions