பத்து கெட்டப்புகளில் நடிக்கும் மலையாள மைதிலி..!

Bookmark and Share

பத்து கெட்டப்புகளில் நடிக்கும் மலையாள மைதிலி..!

நடிகர்கள் தான் கெட்டப்புகளில் 'தசாவதாரம்' காட்டமுடியுமா..? நடிகைகளாலும் முடியும் என துணிச்சலுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை மைதிலி. மலையாள சினிமாக்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில், குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் வெளுத்துக்கட்டுபவர் நடிகை மைதிலி.

தற்போது ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'லோஹம்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். ஆனால் அவர் பத்து கெட்டப்புகளில் நடிக்க இருக்கும் படத்தின் பெயர் 'காட்சே' . இந்தப்படத்தில் நாடக நடிகையாக நடிப்பதால் மைதிலிக்கு காட்சிகளுக்கு ஏற்றவிதமாக பத்து விதமான தோற்றங்களில் நடிக்கவேண்டியிருக்கிறதாம்.

டி.என்.பிரகாஷன் என்பவர் எழுதிய காந்திகிராமம் என்கிற குறும்படத்தை தழுவி, இந்தப்படம் தயாராகி வருகிறதாம். இந்தப்படத்தின் கதாநாயகனாக வினய் போர்ட் நடிக்கிறார். படத்தில் இவரது பெயர் அரிச்சந்திரன்.. காந்திய புத்தகங்களை படித்துவிட்டு அதன்படி நடக்கும் கேரக்டராம்.

தலசேரி, திருச்சூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions