மஜா இயக்குனரின் படத்தில் மீண்டும் இணையும் திலீப் - மம்தா..!

Bookmark and Share

மஜா இயக்குனரின் படத்தில் மீண்டும் இணையும் திலீப் - மம்தா..!

மஜா இயக்குனர் என்றதும் அந்த மாதிரிப்படங்களை எடுக்கும் இயக்குனர் என்று நினைத்து விட வேண்டாம். மலையாளத்தில் மம்முட்டியை வைத்து தொம்மனும் மக்களும் என்கிற சூப்பர்ஹிட் படத்தை எடுத்து,

அதை தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டு, விக்ரமை வைத்து மஜா வாக மாற்றி பிளாப் கொடுத்தாரே அவர் தான் இயக்குனர் ஷபி. மலையாளத்தில் சூப்பர்ஹிட், பிளாக் பஸ்டர் ரெக்கார்டுகள் பல அவரது கைவசம் உண்டு.

இன்றும் மலையாள சேனலில் விஷேச நாட்களில் ஆக்கிரமிப்பு செய்யும் முக்கியமான படமான மாயாவி; இவர் இயக்கியதுதான்.

2010ல் திலீப்பை வைத்து மேரிக்குண்டொரு குஞ்சாடு படத்தை இயக்கிய ஷபி இப்போது மீண்டும் திலீப்பை வைத்து ஒரு படம் இயக்க தயாராகிவிட்டார். திலீப்பிற்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே பாசஞ்சர், மை பாஸ் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ராஜபுத்திரா ரஞ்சித் என்பவர் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் கனடாவில் தொடங்கவுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions