மேஜர் ரவி கதாநாயகனாக மாறியது ஏன்..?

Bookmark and Share

மேஜர் ரவி கதாநாயகனாக மாறியது ஏன்..?

ராணுவப்படங்களாக இயக்கிவந்த மேஜர் ரவி, தனக்கு நடிக்கவேண்டும் என தோன்றினால் அவ்வப்போது சின்னசின்ன வேடங்களில் தலைகாட்டுவதோடு சரி... படங்களை இயக்க வருவதற்குமுன் கூட சிநேகிதியே, ஆளவந்தான் என தமிழ் உட்பட சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

கடந்த மாதம் இவர் டைரக்சனில் வெளியான பிக்கெட்-43 படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்க, அடுத்ததாக் மோகன்லாலை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார் மேஜர் ரவி.

இந்த நிலையில் தான் இவரை கதாநாயகனாக, ஸாரி.. கதையின் நாயகனாக நடிக்க சொல்லி வாய்ப்பு தேடிவந்துள்ளது. மேஜரும் அதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். காரணம் கதையில் இவரது கேரக்டரின் தன்மை அப்படி.. பி.யு.தாமஸ் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை பின்னப்பட்டுள்ளதாம்.

கடந்த 50 வருடங்களாக இந்த பி.யு.தாமஸ் என்பவர் மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர். கோட்டயம் பகுதிய சேர்ந்த பி.யு.தாமஸ், கோட்டயம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் கிட்டத்தட்ட 5000 நோயாளிகளுக்கு தினசரி தனது செலவில் உணவு அளித்து வந்தவர்.

அவரைப்பற்றிய கேரக்டர் என்றதுமே உடனே நடிக்க ஒத்துக்கொண்டாராம் மேஜர் ரவி.   அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் 25 வயது இளைஞனாகவும் மற்றும் 67 வயது முதியவராகவும் இருவித கெட்டப்புகளிலும் நடிக்கிறார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions