'மகாநதி'யும் கமல்ஹாசனும்...!

Bookmark and Share

'மகாநதி'யும் கமல்ஹாசனும்...!

கமல்ஹாசன், சுகன்யா நடிப்பில், சந்தானபாரதி இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளிவந்த 'மகாநதி' திரைப்படம் கமல்ஹாசன் நடித்த படங்களிலேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படமாக அமைந்தது.

அவருடைய வழக்கமான பாணியிலிருந்து விலகி ஒரு குடும்பத்துக் கதையை அனைவரும் ரசிக்கும்படியாக வெளிவந்த அந்தப் படம் நல்ல வசூலுடன் அருமையான படம் என்ற பாராட்டையும் பெற்றது.

அந்தப் படத்தைப் பற்றி 20 ஆண்டுகள் கழித்து கடந்த சில நாட்களாக  சமூக வலைத்தளங்களில் ஒரு விஷயம் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. 'மகாநதி' என்பது ஒடிசா, சட்டீஸ்கர் மாநிலங்களில் பாயும் ஒரு நதி.

அந்த நதியின் பெயரைத்தான் கமல்ஹாசன் அவருடைய படத்தின் பெயராக வைத்திருந்தார். அந்த 'மகாநதி' படத்திலும் ஆறுகள், நதிகளின் பெயருடன் தொடர்புடைய பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

படத்தில் நாயகன் கமல்ஹாசனின் பெயர் 'கிருஷ்ணா'. நாயகி சுகன்யாவின் பெயர் 'யமுனா'. கமல்ஹாசனின் மகளின் பெயர் 'காவேரி', மகனின் பெயர் 'பரணி'. படத்தில் கமல்ஹாசனின் ஆரம்ப கால குடும்ப வாழ்க்கை காவிரி நதிக்கரையில் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும் என அவர் கூவம் நதிக்கரையில்தான் முடிவெடுப்பார். தொலைந்து போன அவருடைய மகளை கங்கை நதிக்கரை நகரமான கல்கத்தாவில் கண்டுபிடிப்பார். மீண்டும் அவருடைய குடும்ப வாழ்க்கையை காவிரி நதிக்கரையில் தொடர்வார்.  

இப்படி நதிகளையும் ஒரு கருப்பொருளாக கமல்ஹாசன் தன்னுடைய 'மகாநதி' படத்தில் இடம் பெறச் செய்த விஷயம் இருபது ஆண்டுகள் கழித்து இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions