மேக்கப்வுமன் பானுவுக்கு லிங்கா படத்தில் ஒருநாள் சம்பளம் 65 ஆயிரம்

Bookmark and Share

மேக்கப்வுமன் பானுவுக்கு லிங்கா படத்தில் ஒருநாள் சம்பளம் 65 ஆயிரம்

சினிமாவில் ஒப்பனை கலைஞராக ஆண்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும், பெண்கள் வேலை செய்யக் கூடாது என்ற விதி உள்ளது. இதை மீறி சில பெண்கள் மேக்கப்வுமனாக வேலை பார்த்து வந்தனர்.

அவர்களில் பானு என்பவரும் ஒருவர். மற்ற மேக்கப்மேன்களுக்கு எல்லாம் ஒருநாளைக்கு சுமார் இரண்டாயிரம்தான் சம்பளம். பானுவுக்கு ஒரு நாள் சம்பளம் 25 ஆயிரம். அதுமட்டுமல்ல, நடிகர் நடிகைகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலில்தான் அவருக்கு ரூம் போட வேண்டும்.

விமானத்திலும் முதல் வகுப்பில்தான் பயணம் செய்வார். இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்களுடன்தான் படங்களில் பணிபுரிய ஒப்புக்கொள்வாராம் பானு. அதனாலோ என்னவோ ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்கள் எல்லாருமே பானுவை தங்கள் படங்களில் பணியாற்ற அழைக்கின்றனர்.

ஷங்கர் இயக்கிய சிவாஜி படம் தொடங்கி ரஜினிக்கு இவர்தான் ஒப்பனை கலைஞர். சிவாஜி படத்தில் பானு போட்ட மேக்கப் ரஜினிக்கு பிடித்துப்போக பானுவை தன் ஆஸ்தான மேக்கப்வுமனாக்கிவிட்டார் ரஜினி.

லிங்கா படத்தில் ரஜினிக்கு மட்டுமல்ல அனுஷ்கா, சோனாக்ஷி ஆகியோருக்கும் பானுவே மேக்கப்போட்டிருக்கிறார். லிங்கா படத்திற்காக மூன்று நட்சத்திரங்களுக்கு மேக்கப்போட்டதால் பானுவுக்கு ஒருநாளைக்கு 65 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.


Post your comment





Related News
நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா
ஆகஸ்ட் 30 ல் தாமிரபரணி பானு திருமணம்
அழகு சிகிச்சையில் இறங்கிய தாமிரபரணி பானு!
தமிழில் அறிமுகமாகும் நடிகை பானுஸ்ரீ மெஹ்ரா
ஹீரோயினாக நடிப்பதால் மட்டுமே பெயர் கிடைத்துவிடாது” குணச்சித்திர பானுவின் விளக்கம்
புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க மறுத்த தாமிரபரணி பானு!
சஸ்பென்சை உடைத்த பானு!
படங்களை தேர்ந்தெடுக்கும் கலையை கற்றுக்கொண்டாராம் முக்தா பானு!
பானுவுக்கு அறுவை சிகிச்சை
டுவிட்டரில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு பயமுறுத்திய த்ரிஷா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions