சொத்து தகராறில் தெலுங்கு நடிகை மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: போலீசில் புகார்

Bookmark and Share

சொத்து தகராறில் தெலுங்கு நடிகை மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: போலீசில் புகார்

தெலுங்கு கன்னட படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் மாலாஸ்ரீ. இவர் விஜய சாந்தி போல் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார். மாலாஸ்ரீ சென்னையில் பிறந்தவர். பின்னர் பெங்களூரில் குடியேறி நடிகையானார். ராமு என்ற சினிமா தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாலாஸ்ரீக்கு கர்நாடகம், மற்றும் ஆந்திராவில் நிறைய சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் சொத்து விற்பனை விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டன. இதையடுத்து மாலாஸ்ரீக்கு மிரட்டல் வந்தது. அதுவும் சாதாரண மிரட்டல் அல்ல. ஆசிட் வீசப் போவதாக மிரட்டினார்கள். இதனால் மாலாஸ்ரீ அதிர்ச்சியாகியுள்ளார். மூன்று பேர் அவரது போனில் தொடர்பு கொண்டு இந்த மிரட்டலை விடுத்து இருக்கிறார்கள்.

ஓன்னை ஒழித்து விடுவோம். வெளியே போகும்போது ஆசிட் வீசுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். கதாநாயகி ஒருவருக்கு ஆசிட் வீசப் போவதாக மிரட்டல் வந்து இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசில் மாலாஸ்ரீ புகார் அளித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions