இன்று மாலை வெளியாகும் மாலை நேரத்து மயக்கம் பர்ஸ்ட் லுக்

Bookmark and Share

இன்று மாலை வெளியாகும் மாலை நேரத்து மயக்கம் பர்ஸ்ட் லுக்

இயக்குனர் செல்வராகவன் இயக்குவதாக திட்டமிடப்பட்டு, பூஜையெல்லாம் போடப்பட்ட படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. இப்படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ பெரிய அளவில் வெற்றி பெறாததையடுத்து இப்படத்தின் பணிகளை ஒதுக்கி வைத்தார்.

இதையடுத்து, தனது மனைவி கீதாஞ்சலியை இயக்குனராக களமிறக்கி, இந்த படத்தை தொடங்கினார். ஆனால், படத்தின் தலைப்பை மட்டும்தான் கீதாஞ்சலிக்கு விட்டுக்கொடுத்ததாக செல்வராகவன் கூறியிருந்தார். இதற்கடுத்து, கீதாஞ்சலி முற்றிலும் புதுமுகங்களை வைத்து இப்படத்தை இயக்க தொடங்கினார்.

தற்போது இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், ‘மாலைநேரத்து மயக்கம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதன்படி, இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் சேர்ந்து வெளியிடவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் மகன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும், இந்தியில் பிரபல நடிகையும், மாடலுமான வாமிக் கஃபி கதாநாயகியாக நடிக்கிறார். அம்ரித் ராவ் இசையமைக்கிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வராகவன் இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். 


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
தந்தை கண்டித்தும் டைவர்ஸ் நடிகை வீட்டுக்கு ராத்திரி விசிட் அடிக்கும் வாரிசு நடிகர்
சின்னத்திரை நடிகரை பாராட்டிய தோனி
ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்: சபரிமலை தந்திரி
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்
விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்தியவர் திரும்ப வருகிறார்!
பிரபல திரைப்பட பாடலாசிரியர் திடீர் மரணம்!
8 படங்களுடன் புத்தாண்டைத் தொடங்கும் கோலிவுட்!
புத்தாண்டில் ரிலீஸாகும் மாலை நேரத்து மயக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions