காதல் ஜோடியும் பார்க்க வேண்டிய படம் மாலை நேரத்து மயக்கம்

Bookmark and Share

காதல் ஜோடியும் பார்க்க வேண்டிய படம் மாலை நேரத்து மயக்கம்

செல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. இப்படத்தில் கதாநாயகனாக பாலகிருஷ்ணன் மற்றும் கதாநாயகியாக வாமிகா என்ற புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள். உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் கம்பெனிக்கு இசை ஆல்பம் தயாரித்த அம்ரித் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி வரிசையில் ஒரு ஜனரஞ்சகமான காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசரும் வெளியானது.

இப்படத்தை பார்த்த செல்வராகவன், ‘என்ன சொல்வது என்று தெரியவில்லை. தற்போது தான் என்னுடைய மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தை பார்த்தேன். மெய்மறந்து போனேன். ஒவ்வொரு ஜோடியும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என்றார்.


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
தந்தை கண்டித்தும் டைவர்ஸ் நடிகை வீட்டுக்கு ராத்திரி விசிட் அடிக்கும் வாரிசு நடிகர்
சின்னத்திரை நடிகரை பாராட்டிய தோனி
ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்: சபரிமலை தந்திரி
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்
விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்தியவர் திரும்ப வருகிறார்!
பிரபல திரைப்பட பாடலாசிரியர் திடீர் மரணம்!
8 படங்களுடன் புத்தாண்டைத் தொடங்கும் கோலிவுட்!
புத்தாண்டில் ரிலீஸாகும் மாலை நேரத்து மயக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions