இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்

Bookmark and Share

இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்

சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் எழுதி இயக்கி வரும் “அருவா சண்ட’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, அனுராதா பட் பாடிய “ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக...’ என்ற பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது. 

கதாநாயகியின் அறிமுகப் பாடலான இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன், இயக்குநர் கொடுத்த உடைகளை அணிய முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்
இந்தப் பாடலில் கொஞ்சம் கவர்ச்சியாக தெரிய வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் அப்புறம் என்ன என்று இயக்குநர் ஆதி கேட்க நீங்க சொன்னதை விட எடுத்த டிரஸ் ரொம்ப சிறியதாக இருக்கிறது.

இதுவரை இப்படிப்பட்ட டிரஸ் அணிந்து ஆடியதில்லை என்று மாளவிகா பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் சுமார் ஒருமணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. 

நடன இயக்குநர் ராதிகாவும் மாளவிகாவுக்கு புரியவைக்க முயற்சி செய்தார். கடைசியில் வேறு சில உடைகளை வெட்டி தைத்துக் கொடுத்தார் இயக்குநர். பின்னர் ஓரளவு சமாதானம் அடைந்த மாளவிகா, கொட்டும் அருவியில் நனைந்தபடி நடனக் குழுவினருடன் செமத்தியாக ஆட்டம் போட்டார்.

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்து வரும் அருவா சண்ட திரைப்படம் விரைவில் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions