நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா மேனன்!

Bookmark and Share

நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா மேனன்!

‘இது வேற மாதிரி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த மாளவிகா மேனன், பின்னர் ‘விழா’ படத்தில் நாயகி ஆனார். ‘நிழலா நிஜமா’ படத்திலும் நடித்தார். இப்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது தமிழ் படங்களில் நடிப்பதற்கு தற்காலிக விடுமுறை விட்டிருக்கிறார். இது குறித்து மாளவிகா மேனனிடம் கேட்ட போது.... நான் இப்போது பிளஸ்–2 படித்து வருகிறேன்.

அடுத்து கல்லூரி படிப்பையும் தொடரும் எண்ணம் இருக்கிறது. தற்போது, மலையாள படங்களில் நடிக்கிறேன். படிப்பதற்கு தடையில்லாத வகையில் நேரம் கிடைக்கும் போது சூட்டிங் போகிறேன். வேறு மாநிலங்களில் சென்று நடித்தால் எனது படிப்பு பாதிக்கப்படும்.

பிரச்சினை ஏற்படும். எனவே தமிழ் படங்களில் ‘‘நடிப்பதற்கு தற்காலிகமாக விடுமுறை விட்டிருக்கிறேன். பிளஸ்–2 படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பேன்.

கல்லூரியில் படிப்பதும் எனது லட்சியம். எனவே அதற்கும் பாதிப்பு இல்லாத வகையில் நடிக்க முயற்சி செய்வேன். அது பற்றி ஒருசில மாதங்களில் முடிவு செய்வேன்’’ என்றார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions