காதலில் விழுந்த குக்கூ நாயகி மாளவிகா நாயர்!

Bookmark and Share

காதலில் விழுந்த குக்கூ நாயகி மாளவிகா நாயர்!

அட்டகத்தி தினேஷ் நடித்த குக்கூ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா நாயர். முதல் படத்திலேயே கண் பார்வையில்லாத பெண்ணாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.

அதனால் தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வரப்போகிறார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எனக்கு நிறைய படங்களில் நடிக்க ஆர்வமில்லை. குறைவான படங்கள் என்றாலும் மனதுக்கு நிறைவு தரும் கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று அந்த படத்திற்கு பிறகு தேடி வந்த பல படங்களை குற்றம் குறை சொல்லி திருப்பி அனுப்பினார் மாளவிகா நாயர்.

அதோடு, மீண்டும் டெல்லிக்கு சென்று விட்டார். இந்த நேரத்தில்தான் வத்திக்குச்சி திலீபன் நடிக்கும் ஒரு படத்தில் அவரை நடிக்க வைப்பதற்காக டெல்லிக்கு சென்று சந்தித்தனர்.

கதைக்கு ஏற்ற ஹீரோயினி என்று அவரை ஒப்பந்தமும் செய்தனர். ஆனால், பின்னர் மாளவிகா நாயருக்கு டெல்லியில் ஒரு காதலர் இருக்கிற விசயமறிந்து, இவரை புக் பண்ணினால் அவ்வப்போது காதலர் ஸ்பாட்டுக்கு வந்து விடுவார்.

அதனால் நடிப்பதை விட அவர்கள் லூட்டி அடிப்பதுதான் அதிகமாக இருக்கும் என்று உடனே அப்படத்தில் இருந்து மாளவிகாவை நீக்கி விட்டனர். ஆக, இப்போது எந்த படவாய்ப்பும் இல்லாததால், காதலருடன் ஜாலியாக பொழுதை கழிப்பதே மாளவிகா நாயரின் முக்கிய பொழுதுபோக்காக கொண்டுள்ளாராம் நடிகை.


Post your comment





Related News
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்
என்னது மாளவிகாவா இது? இப்போ இப்படி ஆகிட்டாங்க - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions