மலையாள சினிமா படப்பிடிப்புகள் ஜனவரி 1–ந்தேதி முதல் நிறுத்தம்

Bookmark and Share

மலையாள சினிமா படப்பிடிப்புகள் ஜனவரி 1–ந்தேதி முதல் நிறுத்தம்

கேரளாவில் உள்ள மலையாள சினிமா தொழில் நுட்ப கலைஞர்கள் சங்கமான ‘பெப்கா’ தனது தொழிலாளர்களுக்கு 33.5 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

இதற்கு மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கினால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தது.

இதனால் தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில் மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் வெளிமாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாகும். இங்குதான் கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தொழிலாளர்கள் கேட்டுள்ள சம்பள உயர்வு 70 சதவீதம் வரை கூடுதலாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்த அளவுக்கு சம்பள உயர்வு அளிக்க முடியாது.

இதனால் தயாரிப்பு செலவு அதிகமாகி படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை ஏற்படும். எனவே திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேறு வழியின்றி வருகிற 1–ந்தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளது.


Post your comment





Related News
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள்! புகார் கொடுத்த இளம் நடிகை
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions