8-வது நாளாக மலையாள பட உலகின் வேலை நிறுத்தம் நீடிப்பு!

Bookmark and Share

8-வது நாளாக மலையாள பட உலகின்  வேலை நிறுத்தம்  நீடிப்பு!

மலையாள திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள் சங்கமான ‘பெப்கா’ தனது தொழிலாளர்களுக்கு 33.5 சதவீதம் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறது.

சம்பள உயர்வு வழங்காவிட்டால் படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் புறக்கணிப்போம் என்றும் எச்சரித்தது. மலையாள தயாரிப்பாளர்கள் சம்பள உயர்வு அளிக்க மறுத்து விட்டனர். 

தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று சம்பள உயர்வு அளித்தால் தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததால் தயாரிப்பாளர் சங்கம் கடந்த 1-ந் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இருதரப்பினருக்கும் நடந்த சமரச பேச்சுகள் தோல்வியில் முடிந்ததால் வேலை நிறுத்தம் நேற்று 8-வது நாளாக நீடித்தது.

தடையை மீறி துல்கர் சல்மானை வைத்து ராஜீவ் ரவி இயக்கிய படத்தின் படப்பிடிப்புக்குள் புகுந்து தயாரிப்பாளர்கள் நிறுத்தினர். படப்பிடிப்புகள் நடக்காததால் தொழிலாளர்களும் நடிகர்-நடிகைகளும் வீட்டில் முடங்கியுள்ளனர்.

வேலை நிறுத்தம் தொடர்வதை தொடர்ந்து மலையாள நடிகர்-நடிகைகள் தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்னை வருகிறார்கள். 

மம்முட்டி தமிழ் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை பார்வதி மேனன் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தமிழில் வாய்ப்பு தேடுகிறார்.

நிவின் பாலி நடித்த பிரேமம் மலையாள படம் சென்னையில் 200 நாட்களை தாண்டி ஓடுவதால் அவரும் தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்கிறார். இதற்கிடையில் தொழிலாளர் சங்கம் உடைந்து பழைய சம்பளத்திலேயே வேலை பார்க்க சிலர் முன்வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions