மலையாளத்தில் படம் இயக்கும் திருப்பாச்சி தங்கச்சி..!

Bookmark and Share

மலையாளத்தில் படம் இயக்கும் திருப்பாச்சி தங்கச்சி..!

ஆட்டோகிராப் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானாலும், விஜய்யின் தங்கச்சி 'கருப்பு' வாக நடித்த திருப்பாச்சி தான் மல்லிகாவை ரசிகர்களிடம் நன்றாக அடையாளம் காட்டியது.

திருச்சூரை சேர்ந்த இவர் தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக மோகன்லாலுடன் நடித்த சினேகா வீடு மற்றும் பிருத்விராஜின் தங்கையாக நடித்த, 'இந்தியன் ரூபி' ஆகிய படங்களில் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அவர் நடித்த பியாரி படத்திற்காக தேசிய விருதும் (ஸ்பெஷல் ஜூரி) அவருக்கு கிடைத்தது.

தற்போது மலையாளத்தில் ஒரு படம் இயக்கப்போவதாக சொல்லி நம்மை ஆச்சர்யபடுத்துகிறார் மல்லிகா. யமுனாராணி என்கிற நடிகையையும் அவளுக்கு டூப்பாக நடிக்கும் பழனியை சேர்ந்த கனகா என்கிற பெண்ணின் கதையையும் படமாக்க இருக்கிறார்.

இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் பின்னணி பாடகி மஞ்சரி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தில் கதாநாயகிகளாக பாவனாவுடன் சேர்ந்து தானும் கனகா என்கிற டூப் வேடத்தில் நடிக்கிறார் மல்லிகா.


Post your comment





Related News
சிம்புவை பற்றி டுவிட் செய்த பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்- என்ன விஷயம்?
பாரிஸ் நகரில் மல்லிகா ஷெராவத் மீது கொள்ளையர்கள் தாக்குதல்
இயக்குனரான ஆட்டோகிராப் மல்லிகா!
அமீருக்கு மனைவியாகிறார் மல்லிகா ஷெராவத்
அமீர்கானுக்கு மனைவியாகும் மல்லிகா
மல்லிகா ஷெராவத்தால் கிடப்பில் மேடம்ஜி
ஷெர்மானுடன் மல்லிகா ரொமான்ஸ்
டர்ட்டி பாலிட்டிக்ஸ் இயக்குனர் மீது நடவடிக்கை: ராஜஸ்தான் அரசு உத்தரவு
சட்டசபை முன் கவர்ச்சி போஸ்: மல்லிகா ஷெராவத் படத்துக்கு தடை விதிக்க ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை
இந்திரா கேரக்டரில் நடிக்க விருப்பம் : மல்லிகா ஷெராவத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions