மல்லிகா ஷெராவத்தால் கிடப்பில் மேடம்ஜி

Bookmark and Share

மல்லிகா ஷெராவத்தால் கிடப்பில் மேடம்ஜி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தயாரிப்பாளராக அறிமுகமாக இருந்த மேடம்ஜி படத்தின் படப்பிடிப்பு, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுர் பண்டார்கர் இயக்கத்தில் உருவாக இருந்த மேடம்ஜி படத்தை, பிரியங்கா சோப்ரா தயாரிப்பது மட்டுமல்லாமல், முன்னணி கேரக்டரில் நடிப்பதாகவும் இருந்தார். அமெரிக்க டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, விரைவில் இந்தியா திரும்ப உள்ளார்.

தாயகம் திரும்பியதும், பிரியங்கா சோப்ரா சஞ்சய் லீலா பன்சாலியின் பஜிராவ் மஸ்தானி படத்திலும், அதன்பின், மிஸ்டர் சலோ மற்றும் கங்காஜல் 2 படங்களிலும் நடிக்க உள்ளார்.

இதனிடையே, மதுர் பண்டார்கரை, பிரியங்கா சோப்ரா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்முடிவில், மேடம்ஜி படத்தின் சூட்டிங்கை, சிறிதுகாலம் நிறுத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மல்லிகா ஷெராவத் நடித்து சமீபத்தில் வெளியான டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் கதையோடு, மேடம்ஜி படத்தின் கதையும் ஒத்திருப்பதால், மேடம்ஜி படம், கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
சிம்புவை பற்றி டுவிட் செய்த பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்- என்ன விஷயம்?
பாரிஸ் நகரில் மல்லிகா ஷெராவத் மீது கொள்ளையர்கள் தாக்குதல்
விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஒஸ்தி நடிகை!
அமிர்க்கானின் டங்கல் படத்தில் நடிக்க மருத்த மல்லிகா ஷெரவாத்!
இயக்குனரான ஆட்டோகிராப் மல்லிகா!
அமீருக்கு மனைவியாகிறார் மல்லிகா ஷெராவத்
அமீர்கானுக்கு மனைவியாகும் மல்லிகா
மலையாளத்தில் படம் இயக்கும் திருப்பாச்சி தங்கச்சி..!
ஷெர்மானுடன் மல்லிகா ரொமான்ஸ்
டர்ட்டி பாலிட்டிக்ஸ் இயக்குனர் மீது நடவடிக்கை: ராஜஸ்தான் அரசு உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions